/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயலர்கள் இல்லை ஊராட்சிகள் தவிப்பு
/
செயலர்கள் இல்லை ஊராட்சிகள் தவிப்பு
ADDED : மார் 17, 2025 01:38 AM
பொங்கலுார்; பொங்கலுார் ஒன்றியத்தில், 16 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி தலைவர் பதவிக்காலம் முடிந்ததால், தற்போது தனி அலுவலர் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகங்கள் செயல்படுகின்றன.
நான்கு ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். தலைவர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து நிர்வாகம் செய்து வந்தனர். தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில், ஊராட்சி செயலாளர்களும் இல்லை.
இதனால், பணிகள் பாதிக்கப்படுகின்றன. அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.