/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கேயத்தில் தொடர் திருட்டால் பீதி
/
காங்கேயத்தில் தொடர் திருட்டால் பீதி
ADDED : நவ 03, 2025 02:08 AM
காங்கேயம்:காங்கேயம் நகராட்சி அகிலாண்டபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடை திறக்க வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 5,௦௦௦ ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.
இதேபோல் காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகில் வேன் ஸ்டாண்ட் பகுதியில் கண்ணன் என்பவரின், மொபைல்போன் கடை பூட்டை உடைத்து இரண்டு செல்போன் திருட்டு போயுள்ளது.
* காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு, 12வது எண்ணுள்ள காடையை காஜாமைதீன் என்பவர், செல்போன் பழுது நீக்குவது மற்றும் கடிகார விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையின் பூட்டு திறக்கப்பட்டு கிடந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்றார்.
கடையில் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். காங்கேயம் நகர பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு நடந்தது, வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனரர்.

