/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பன்னீர் அணியினர் உதயகுமார் மீது புகார்
/
பன்னீர் அணியினர் உதயகுமார் மீது புகார்
ADDED : அக் 28, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குறித்து சமீபத்தில் சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது, 'பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடுவோம்' என, குறிப்பிட்டார்.
இந்நிலையில், பன்னீர்செல்வம் குறித்து அவதுாறாக பேசிய உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பன்னீர்செல்வம் அணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலர் சண்முகம், புறநகர் மாவட்ட செயலர் காமராஜ், மாநகர வடக்கு மாவட்ட செயலர் சிவகுமார் உள்ளிட்டோர், திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.