/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வளர்ச்சிக்கு உதவும் 'பேப் எக்ஸ்போ' கண்காட்சி
/
திருப்பூர் வளர்ச்சிக்கு உதவும் 'பேப் எக்ஸ்போ' கண்காட்சி
திருப்பூர் வளர்ச்சிக்கு உதவும் 'பேப் எக்ஸ்போ' கண்காட்சி
திருப்பூர் வளர்ச்சிக்கு உதவும் 'பேப் எக்ஸ்போ' கண்காட்சி
ADDED : மார் 19, 2025 11:58 PM
திருப்பூர் : மும்பையில் நடக்கும் 'பேப் எக்ஸ்போ' கண்காட்சி, திருப்பூரின் வளர்ச்சிக்கும், புதிய தொழில்நுட்ப பகிர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், மும்பையில் உள்ள கண்காட்சி அரங்கில், 'பேப்ரிக்' மற்றும் துணி பொருட்கள் கண்காட்சி, வரும் ஏப்., 21ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்க உள்ளது. கண்காட்சியில், 250க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினர் 'ஸ்டால்' அமைக்கின்றனர். மொத்தம், இரண்டு லட்சம் சதுரடி பரப்பில் அமைக்கப்படுகிறது.
இந்தியாவின், 320க்கும் அதிகமான தொழில் நகரங்கள் மற்றும் 16 நாடுகளில் இருந்து, தொழில் துறையினர் கடந்த கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். கடந்த கண்காட்சியை காட்டிலும், இந்தாண்டு நடக்கும் கண்காட்சி, தேசிய அளவிலான தொழில்துறையினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த கண்காட்சியில், மொத்த விசாரணையில், 30 சதவீதம் அளவுக்கு, துணி ரகங்கள் தொடர்பான விசாரணை நடந்துள்ளது. 'சர்ட்டிங் மற்றும் சூட்டிங்' பிரிவில், 27 சதவீதம், பாரம்பரிய ஆடைகள் - 16, பட்டன் -7 சதவீதம், 'லேபிள்' - 6 சதவீதம் உட்பட, பல்வேறு ஜவுளி மற்றும் உதிரி பாகங்கள் தொடர்பான வர்த்தக விசாரணை நடந்துள்ளது.
திருப்பூர் வந்திருந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'பின்னலாடை உற்பத்தியாளர்கள், சர்வதேச வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர், சில்லரை விற்பனையாளர், 'இ-காமர்ஸ்' தொழில் நடத்துவோர், வியாபாரிகள் பார்வையிடலாம். திருப்பூரை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், கண்காட்சியை பார்வையிடலாம். குறிப்பாக, ஏற்றுமதியாளர்கள், கண்காட்சியில் புதுரக 'பேப்ரிக்' ரகங்கள் அறிமுகம் குறித்து தெரிந்து கொள்ளலாம்,' என்றனர்.