sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்க! பொதுப்பணித்துறை அதிகாரி அறிவுறுத்தல்

/

'பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்க! பொதுப்பணித்துறை அதிகாரி அறிவுறுத்தல்

'பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்க! பொதுப்பணித்துறை அதிகாரி அறிவுறுத்தல்

'பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்க! பொதுப்பணித்துறை அதிகாரி அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 15, 2025 08:28 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் பாசன சபை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்த தண்டபாணி தலைமை வகித்து பேசியதாவது:

பாசன விவசாயிகள் பலர் பி.ஏ.பி., வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தி வருகின்றனர். நான்காயிரத்து ஐநுாறு கோடி ரூபாய்க்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதிக்கு சென்று தற்போது நிதித்துறை வசம் உள்ளது.

அடுத்த தலைமுறை விவசாயிகளும் விவசாயத்தை செழிப்பாக செய்ய வேண்டுமானால், இத்திட்டத்தைக் காப்பாற்றியாக வேண்டும். நிதியாதாரமே சவாலாக உள்ளது.

வாய்க்கால் - நீர் பங்கீடு பிரச்னை என, ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது சாத்தியமல்ல.

அதிகாரிகள் என்னதான் அரசிடம் கூறினாலும், விவசாயிகளான நீங்கள் முன்னெடுத்துச் சென்றால்தான் எந்த ஒரு திட்டமும் நிறைவேறும்.

பி.ஏ.பி.,யில் தண்ணீர் வரும் வரை மட்டுமே பேசும் நீங்கள், நீர் வந்துவிட்டால், அதன் பிறகு அனைத்தையும் மறந்து விடுகிறீர்கள்.

விவசாயத்தை செழிப்பாகவும், லாபகரமான தொழிலாகவும் மாற்ற வேண்டுமானால், தொழில்நுட்ப ரீதியாக பி.ஏ.பி.,யை கட்டமைக்க வேண்டும். இது, விவசாயிகளான நீங்கள் மனது வைத்தால் தான் முடியும்.

பகிர்மான குழு தலைவர்கள் பாசன சபை தலைவர்கள் மற்றும் பாசன விவசாயிகள் என, அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து தீர்க்கமான முடிவெடுங்கள்.

தொழில்நுட்ப ரீதியாக பி.ஏ.பி.,யை கட்டமைக்கவும், அடுத்த தலைமுறை விவசாயிகளுக்கு, தடையின்றி தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கிடைத்து வரும் தண்ணீர், ஆண்டுதோறும் கிடைக்கும் வகையில், பி.ஏ.பி.,யை தொழில்நுட்ப ரீதியாக நவீனப்படுத்த வேண்டும். தண்ணீர் திருட்டு, சேதம் உள்ளிட்டவை இல்லாமல், இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழாய் மூலம் கொண்டு செல்வதால், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பது நிச்சயம் சாத்தியமாகும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us