sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பி.ஏ.பி., பாசன பகிர்மான கால்வாய்களை... துார்வாரி கொடுங்க! கடிதம் அனுப்பிய பொதுப்பணித்துறையினர்

/

பி.ஏ.பி., பாசன பகிர்மான கால்வாய்களை... துார்வாரி கொடுங்க! கடிதம் அனுப்பிய பொதுப்பணித்துறையினர்

பி.ஏ.பி., பாசன பகிர்மான கால்வாய்களை... துார்வாரி கொடுங்க! கடிதம் அனுப்பிய பொதுப்பணித்துறையினர்

பி.ஏ.பி., பாசன பகிர்மான கால்வாய்களை... துார்வாரி கொடுங்க! கடிதம் அனுப்பிய பொதுப்பணித்துறையினர்


ADDED : ஜூலை 08, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;புதர் மண்டி பரிதாப நிலையிலுள்ள பி.ஏ.பி., இரண்டாம் பாசன கால்வாய்களை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், துார்வார வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில், ஊரக வளர்ச்சித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். திட்டத்தை செயல்படுத்த கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து சுழற்சி முறையில், தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டல பாசனத்துக்கும், இரண்டு ஆண்டு இடைவெளி ஏற்படுகிறது.

இந்த இடைவெளியில், பயன்பாடு இல்லாமல் விடப்படும், பகிர்மான கால்வாய்கள் முழுவதும், புதர் மண்டி, கரைகள் சரிந்து பரிதாப நிலைக்கு மாறி விடுகிறது. முன், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் வாயிலாகவும், விவசாயிகளின் பங்களிப்புடன் இத்தகைய கால்வாய்கள் துார்வாரப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களில், போதிய நிதி இல்லாத நிலையில், கடந்த மண்டல பாசன காலங்களில், பகிர்மான கால்வாய்களை துார்வாருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.

தொடர் வலியுறுத்தல்


பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வரும், ஆக.,ல், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வறட்சியான தருணத்தில், பாசன நீர் திறக்கப்பட உள்ளதால், கடைமடைக்கும் தண்ணீர் கிடைக்க கால்வாய் சீரமைப்பு அவசியம். எனவே, பாசன காலம் துவங்கும் முன், பகிர்மான மற்றும் இதர கிளை கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

திட்டத்தில் செய்யுங்க


புதர் மண்டி காணப்படும் பகிர்மான கால்வாய்களை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் துார்வார வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில், ஊரக வளர்ச்சித்துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

உதாரணமாக, புதுப்பாளையம் கிளை கால்வாயில் இருந்து, 18 பகிர்மான கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த கால்வாய்களை துார்வார வலியுறுத்தி, பொதுப்பணித்துறை இளம்பொறியாளர் சார்பில், சம்பந்தப்பட்ட பி.டி.ஓ., க்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், 'புதுப்பாளையம் கிளை கால்வாயில் பிரியும், பகிர்மான, உப பகிர்மான கால்வாய்கள் கரையிலுள்ள மண் மற்றும் செடி, கொடி மற்றும் முட்புதர்களை அகற்றவும், மண்படிமானங்களை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அகற்ற உதவ வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 3 கால்வாய்கள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம்; 15 கால்வாய்கள் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் அமைந்துள்ளன.

எனவே, துார்வாரும் பணிகளை மேற்கொள்ள, ஒன்றிய அதிகாரிகள் வாயிலாக கருத்துரு பெற்று, கோவை, திருப்பூர் கலெக்டர்கள் பணிகளை துவக்க உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us