/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிநவீன இயந்திரங்களின் அணிவகுப்பு 'நிட்ேஷா' கண்காட்சி 8ல் துவக்கம்
/
அதிநவீன இயந்திரங்களின் அணிவகுப்பு 'நிட்ேஷா' கண்காட்சி 8ல் துவக்கம்
அதிநவீன இயந்திரங்களின் அணிவகுப்பு 'நிட்ேஷா' கண்காட்சி 8ல் துவக்கம்
அதிநவீன இயந்திரங்களின் அணிவகுப்பு 'நிட்ேஷா' கண்காட்சி 8ல் துவக்கம்
ADDED : ஆக 03, 2025 11:45 PM
திருப்பூர்;
அதிநவீன இயந்திரங்களுடன், 23 வது 'நிட்ேஷா -2025' கண்காட்சி, திருப்பூரில் வரும் 8ம் தேதி துவங்குகிறது.
திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியில், 'நிட்ேஷா' கண்காட்சியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் அணிவகுக்கும், 23வது 'நிட்ேஷா' கண்காட்சி, திருப்பூரில் வரும் 8ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
காங்கயம் ரோடு, 'டாப்லைட்' வளாகத்தில், ஐந்து பெரிய அரங்குகளில், 500க்கும் அதிகமான 'ஸ்டால்'களுடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும், 'நிட்ேஷா' கண்காட்சி, புதிய பரிணாம வளர்ச்சியை காட்சிப்படுத்தும் நோக்கில் அமைய உள்ளது.
உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ள ஏ.ஐ., தொழில்நுட்பம், கண்காட்சியில் பிரதானமாக இருக்கும். குறிப்பாக, பிரின்டிங் தொழில்பிரிவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை, தொழில்நுட்பங்கள் அதிகளவில் இடம்பெறப்போகின்றன.
தையல் இயந்திரங்கள், 'நிட்டிங்' இயந்திரங்கள், நவீன 'கட்டிங்' இயந்திரங்கள், தானியங்கி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள், டிஜிட்டல் பிரின்டிங் இயந்திரங்கள், நவீன எம்ப்ராய்டரி இயந்திரங்கள், எலாஸ்டிக் 'கட் அண்ட் ஸ்டிச்' இயந்திரங்கள், பல்வேறு வகையான ஆயத்த ஆடை உற்பத்திக்கான மதிப்பு கூட்டும் பொருட்கள் கண்காட்சியும் நடக்க உள்ளது.