/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக களமிறங்கியது துணை ராணுவம்!: 82 பெண்கள் அடங்கிய குழு 'கம்பீர' வருகை
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக களமிறங்கியது துணை ராணுவம்!: 82 பெண்கள் அடங்கிய குழு 'கம்பீர' வருகை
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக களமிறங்கியது துணை ராணுவம்!: 82 பெண்கள் அடங்கிய குழு 'கம்பீர' வருகை
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக களமிறங்கியது துணை ராணுவம்!: 82 பெண்கள் அடங்கிய குழு 'கம்பீர' வருகை
ADDED : மார் 09, 2026 05:35 AM

திருப்பூர்: சட்டசபை தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 82 பெண்கள் நேற்று திருப்பூர் வந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தயாராகியுள்ளது. மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக கொடி அணிவகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட டில்லியில் இருந்து சிறப்பு ரயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று மதியம் திருப்பூர் வந்தனர்.
முதல் கட்டமாக, இரண்டு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. உள்ளிட்ட, 82 பேர் வந்துள்ளனர். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த அவர்களை வரவேற்கும் வகையில், மாநகர போலீசார் ஏற்பாடு செய்தனர்.
மகளிர் தினம் என்பதாலும், வந்திருந்த பாதுகாப்பு படையினர் பெண்கள் குழு என்பதாலும், அவர்களை தெற்கு துணை கமிஷனர் தீபா சத்யன் உள்ளிட்ட மாநகர பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வரும் நாட்களில் மேலும் பாதுகாப்பு படையினர் வர உள்ளனர். தற்போது வந்துள்ளவர்கள்தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மாநகரில் கொடி அணி வகுப்பு உள்ளிட்டவை நடத்த உள்ளனர். பதற்றமான பகுதிகள், பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வருகையால், சட்டசபை தேர்தலுக்கான களை உருவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்கிறது. வாக்குச்சாவடி வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து வாக்காளர்களும் எளிதாக வாக்களிக்க முடியும் சூழல் உருவாக்கப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

