ADDED : நவ 23, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
அவிநாசி: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று நடைபெறும் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, இன்று (நவ.,23) மூலவர் சன்னதி, ராஜகோபுரம், அம்மன் கோபுரம், கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
