தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போட்டிகளில் பங்கேற்க பெற்றோர் அனுமதி

போட்டிகளில் பங்கேற்க பெற்றோர் அனுமதி

போட்டிகளில் பங்கேற்க பெற்றோர் அனுமதி


ADDED : அக் 11, 2024 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை : அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தி, ஊக்குவிப்பதற்கு கலைத்திருவிழா நடக்கிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்துள்ளது.

அடுத்தகட்டமாக குறுமையம் மற்றும் வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள், வட்டார அளவிலும், மாவட்டம், மாநில அளவிலும் தகுதி பெறுகின்றனர்.

குறுமையம், வட்டார அளவிலான போட்டிகள் வெவ்வேறு பள்ளிகளில் நடக்கிறது. இதனால் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலிருந்து, அவர்கள் போட்டிகளுக்கு வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறு செல்வதற்கு அந்த மாணவர்களின் பெற்றோரின் அனுமதியும் பெறுவதற்கு கல்வித்துறை தற்போது அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us