/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மகளிர் விடுதி பெற்றோர், மாணவியர் எதிர்பார்ப்பு
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மகளிர் விடுதி பெற்றோர், மாணவியர் எதிர்பார்ப்பு
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மகளிர் விடுதி பெற்றோர், மாணவியர் எதிர்பார்ப்பு
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மகளிர் விடுதி பெற்றோர், மாணவியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 09, 2025 11:40 PM

திருப்பூர்; திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும்' என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கோவை, பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில், கடந்த, 1971ல் துவங்கப்பட்டு, மாநிலத்தில் அதிகளவு மாணவியர் படிக்கும் இரண்டாவது பெரிய கல்லுாரி என்ற பெருமையை பெற்றிருக்கிறது திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி. இங்கு, 1,066 இளங்கலை 'சீட்', 251 முதுகலை 'சீட்' உள்ளன. கல்லுாரி துவங்கி இதுவரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவியர், பட்டம் பெற்று சென்றுள்ளனர். மாநகர் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து, 500க்கும் அதிகமான மாணவியர் கல்லுாரிக்கு வந்து செல்கின்றனர்.
பெற்றோர் கூறியதாவது:
கல்லுாரியில் மாணவியர் விரும்பி தேர்வு செய்யும் அளவுக்கான பாடப்பிரிவுகள் உள்ளன; கல்லுாரி வளாகமும் விசாலமாக உள்ளது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுடன் கல்லுாரி சிறப்பாக செயல்பட்டு வருவதால், இங்கு இணைந்து படிக்க ஆண்டுக்காண்டு மாணவியரின் ஆர்வம் அதிகரிக்கிறது. நடப்பாண்டு கூட மொத்தமுள்ள, 1,066 'சீட்'களுக்கு, 5,010 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவியருக்கான கவுன்சிலிங்கில் பெற்றோரும் பங்கேற்று, கல்லுாரி வளாகத்தை பார்வையிடுகின்றனர். கல்லுரியில், விடுதி வசதி இல்லை; கேன்டீன் வசதியும் திருப்திகரமாக இல்லை என்பதையறிந்து திருப்தியற்ற மனநிலையுடன் திரும்பிச் செல்கின்றனர். மாணவியர் தங்கி படிக்கும் வகையில் விடுதி வசதி ஏற்படுத்தினால், கல்லுாரியின் வளர்ச்சி மேம்படும்.
இவ்வாறு மாணவியர் தெரிவித்தனர்.