/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
/
மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
ADDED : ஜன 20, 2024 02:37 AM

அனுப்பர்பாளையம்;திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்றுச்சுவர் வசதி இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இதனால் இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி அசுத்தம் செய்தல், படுத்து உறங்குவது, மாணவர்கள் பயன்படுத்தும் டேங்க் குடிநீரை அங்குள்ளவர்கள் பயன்படுத்துவது, பள்ளி வளாகம் வழியாக வாகனத்தில் செல்வது, உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அங்குள்ள ஒருவர் பள்ளி இடத்தை எங்களுடைய இடம் என அடைக்க முற்பட்டார். இதனை அறிந்த பெற்றோர் பலர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கான இடத்தை அளவீடு செய்து, மாணவர்கள் நலன் கருதி சுற்றி வேலி அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அசுத்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பள்ளிக்கு வந்த வடக்கு தாசில்தார் பரமேஸ்வரன், பெருமாநல்லுார் எஸ்.ஐ., உமாமகேஸ்வரி, ஆகியோர் மாணவ பெற்றோர்களை சமாதானம் செய்தனர். பள்ளிக்கான இடத்தை அளவீடு செய்து வேலி அமைக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என உறுதி கூறியதை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.