sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம்; திருப்பூரில் தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை

/

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம்; திருப்பூரில் தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம்; திருப்பூரில் தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம்; திருப்பூரில் தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை


ADDED : ஜூலை 31, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் தனியார் பள்ளியில், 1ம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமியிடம், அத்துமீறிய அசாம் மாநில வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியில் போதிய பாதுகாப்பை ஏற்படுத்தாததை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், கே.வி.ஆர்., நகரில் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. நேற்று முன்தினம் மாலை கழிவறைக்கு சென்ற, முதல் வகுப்பு படித்து வரும், ஆறு வயது சிறுமியிடம், துாய்மைப்பணியில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெய் நாசாரி, 22 என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால், அசாம் வாலிபர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக, முதலில் தகவலறிந்த ஆசிரியை மற்றும் பள்ளி தரப்பினர் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி நேற்று காலை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டு, பள்ளியை முற்றுகையிட்டனர். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் மலர்க்கொடி உட்பட பா.ஜ., வினர் பங்கேற்றனர்.

காலை, 9:15 மணிக்கு ஆரம்பித்த முற்றுகை போராட்டம் மதியம் வரை தொடர்ந்து நடந்தது. எவ்வித பாரபட்சமும் இல்லாமல், அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், பெற்றோர் ஏற்று கொள்ள மறுத்து, பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பெண் பணியாளர்கள் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து கூறியதாவது:

போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சு நடத்தப்பட்டது. அதில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளோம். பள்ளி வளாகத்தில் துாரமாக அமைந்துள்ள கழிப்பிடத்தை முழுமையாக அகற்றி விட்டு, வேறு இடத்தில் கட்டப்பட உள்ளது. துாய்மை பணிக்கு இனி பெண் பணியாளர்க ளை நியமிக்க கூறியுள்ளோம். விரைவில், பெற்றோர்களுடனான சந்திப்பு கூட்டம் நடத்தப்படவும் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us