/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்
/
பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்
ADDED : ஜன 25, 2024 06:21 AM

திருப்பூர் : சாமளாபுரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் அறங்காவலர் குழு செயலாளரான ராமமூர்த்தி பள்ளி நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.
குழுவில் இருந்த உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் நீக்கப்பட்டனர். இதுதொடர்பாக, அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், செந்தில்குமார் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாகவும், இதனால், ராமமூர்த்தி தரப்பு பள்ளி நிர்வாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என எதிர்தரப்பு கூறியதாகவும் தெரிகிறது.
பள்ளி நிர்வாகத்தின் பிரச்னை காரணமாக, பொதுதேர்வு எழுதும் மாணவர் கல்வி பாதிப்பதாக கூறி நேற்று பெற்றோர் பள்ளி முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மங்கலம் போலீசார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் பேச்சு நடத்தி, 'மாணவர்களின் கல்வி பாதிக்காது.
இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகத்தில் உள்ள, இருதரப்பையும் அழைத்து பேச்சு நடத்தப்படும்,' என்று உறுதியளித்தனர்.