/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணி நிரந்தர அறிவிப்பு இழுத்தடிப்பு பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
/
பணி நிரந்தர அறிவிப்பு இழுத்தடிப்பு பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
பணி நிரந்தர அறிவிப்பு இழுத்தடிப்பு பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
பணி நிரந்தர அறிவிப்பு இழுத்தடிப்பு பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
ADDED : ஜூன் 20, 2025 02:22 AM
திருப்பூர் : பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என, முதல்வர் உறுதியளித்திருந்தார். ஆனால், முதல்வராக பொறுப்பேற்று, 50 மாதம் கடந்துவிட்ட நிலையில், பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து வருவது, ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வழங்கப்படும், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தை வைத்து, எப்படி குடும்பம் நடத்த முடியும் என்பதை கூடவா, அரசால் உணர முடியாது.
பல ஆண்டுகளாக வழங்கப்படாத மே மாத சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, காலமுறை சம்பளம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என, நம்பினோம். ஆனால், தி.மு.க., வின் ஐந்தாண்டு கால ஆட்சி காலத்தில், இனி, 10 மாதம் மட்டுமே எஞ்சியுள்ளது.
சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வரும் முன்னரே, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் வாக்குறுதியை, முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.