/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரி பேராசிரியர் தேசிய முகாமில் பங்கேற்பு
/
அரசு கல்லுாரி பேராசிரியர் தேசிய முகாமில் பங்கேற்பு
அரசு கல்லுாரி பேராசிரியர் தேசிய முகாமில் பங்கேற்பு
அரசு கல்லுாரி பேராசிரியர் தேசிய முகாமில் பங்கேற்பு
ADDED : ஏப் 25, 2025 08:00 AM

திருப்பூர்; மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில், டில்லி, நேரு மைதானத்தில், தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. மத்திய அமைச்சர் மன்சுக்மண்டவியா துவக்கி வைத்து பேசுகிறார். தமிழகத்தில், 5,032 நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் உள்ளனர். இவர்களில் நால்வர் இந்த மாநாட்டில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனர் சாமுவேல்செல்லையா தலைமையிலான குழுவில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு -- 2 அலுவலர் மோகன்குமார் தேர்வாகி உள்ளார்; அரசு கல்லுாரியில் இருந்து தேர்வான ஒரே நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இவரே. இவரை கோவை, பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, சிக்கண்ணா அரசுக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டி, நேற்று வழியனுப்பி வைத்தனர்.