/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., சார்பில் பைக் ரேஸ்; வீரர்கள் பங்கேற்பு
/
தி.மு.க., சார்பில் பைக் ரேஸ்; வீரர்கள் பங்கேற்பு
ADDED : அக் 21, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், பைக் ரேஸ் வேலப்பநாயக்கனுாரில் நடந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, இந்த பைக் ரேஸ் நடந்தது. தி.மு.க., குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி போட்டியை துவக்கி வைத்தனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ், நுாற்றுக்கும் மேற்பட்ட பைக் வீரர்கள் பங்கேற்றனர். 'தி டேட் பார்க்' மற்றும் 'லாபி ரேஸிங்' பிரிவில், தங்கள் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.