/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் சரிவு
/
மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் சரிவு
ADDED : மே 17, 2025 02:35 AM
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சியில், 12 மாநகராட்சி பள்ளிகள் உள்ள போதும், ஒரு பள்ளி கூட நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி விகிதம் பெறவில்லை.
பிளஸ் 2 தேர்ச்சியில், புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சதமடித்தது. இப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், அதிக பட்சமாக, 98.64 சதவீத தேர்ச்சியை தந்துள்ளது. குறைந்தபட்சமாக சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 76.16 சதவீத தேர்ச்சியை தந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் நஞ்சப்பா பள்ளி, 76.60 சதவீதம். நொய்யல் வீதி பள்ளி, 83.04, ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, 89.31, பத்மாவதிபுரம், 90.73. நெசவாளர் காலனி, 94.97. பழனியம்மாள், 95.63, குமார்நகர், 95.65, குமரானந்தபுரம், 96.20, கே.வி.ஆர்., நகர் 96.23. கருவம்பாளையம், 97.69 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் (96.72), மாணவியர் (98.55) இருபாலர் தேர்ச்சி சதவீதத்தில் கருவம்பாளையம் பள்ளி அசத்தியுள்ளது.
பாடவாரியாக தேர்ச்சி சதவீதத்தில் மெட்ரிக் பள்ளிகள் அதிகபட்சமாக, 99.32 சதவீத தேர்ச்சியை தந்துள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சி, 91.71 சதவீதம், மாநகராட்சி பள்ளிகள், 90.70 சதவீதம்.