sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் வலியுறுத்தல்

/

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் வலியுறுத்தல்

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் வலியுறுத்தல்

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் வலியுறுத்தல்


ADDED : பிப் 27, 2024 11:40 PM

Google News

ADDED : பிப் 27, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் உடுமலை வழியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும் இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள் இவர்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் கோடை விடுமுறை வரவுள்ளது. எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us