ADDED : பிப் 25, 2024 11:49 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்:பொள்ளாச்சியில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த அரசு பஸ், திடீரென பிரேக் பிடிக்காத காரணத்தால், விபத்தை தவிர்க்க ரோட்டோரம் இருந்த கம்பி வேலியில் மோதி பஸ் நிறுத்தப்பட்டது.
பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை. உடனே, வாகன போக்குவரத்து இருந்த காரணத்தால், யார் மீதும் மோதாமல் இருக்க ரோட்டின் வலது புறம் இருந்த கம்பி வேலி மீது பஸ்சை மோதி சாதுர்யமாக நிறுத்தினார். இதனால், பஸ்சின் முன்பக்கம் மட்டும் லேசான சேதமடைந்தது. பயணிகள் தப்பினர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
