/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டை சீரமையுங்க பயணியர் கோரிக்கை
/
ரோட்டை சீரமையுங்க பயணியர் கோரிக்கை
ADDED : பிப் 22, 2024 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வழியாக, பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் இங்கு வருகின்றனர்.
ஆனால், பஸ் ஸ்டாண்டிலுள்ள ஓடுதளம் சேதமடைந்து, பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.