நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில் பிரதான பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை உட்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டிலுள்ள யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர், மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.