/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய அலுவலகம் மூலம் 1100 பேருக்கு பாஸ்போர்ட்
/
புதிய அலுவலகம் மூலம் 1100 பேருக்கு பாஸ்போர்ட்
ADDED : மார் 17, 2025 01:51 AM
திருப்பூர்; திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மூலம், கடந்த ஜன., 24 முதல் இம்மாதம் 14 வரை, 1400 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில், 1100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
பின்னலாடை தொழில் மூலம் அன்னியச்செலவாணி பெற்றுத்தரும் திருப்பூரில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜன., 24ம் தேதி திறக்கப்பட்டது. ஒரு மேலாளர் தலைமையில், நான்கு பணியாளர் நியமிக்கப்பட்டனர்.
திருப்பூர் கோட்ட தபால்துறை அலுவலர்கள் கூறியதாவது:
திருப்பூரில் அலுவலகம் செயல்படுவதன் மூலம், பாஸ்போர்ட் பெற கோவை செல்ல வேண்டிய நிலை மாறியது. புதிய அலுவலகத்தில், ஜன., மாதம் - 200 பேர்; பிப்., - 800 பேர்; இம்மாதம், 14ம் தேதி வரை, 400 பேர் என மொத்தம், 1,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 1100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.