/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஸ்கேடா' கருவியால் குடிநீர் கிடைக்கும் 'பாஸ்டா'
/
'ஸ்கேடா' கருவியால் குடிநீர் கிடைக்கும் 'பாஸ்டா'
ADDED : செப் 25, 2024 12:21 AM
திருப்பூர் : மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை கண்காணித்து முறைப்படுத்தும் வகையில், மேல் நிலைத் தொட்டிகளில், 'ஸ்கேடா' கருவி பொருத்தும் பணி துவங்கியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தற்போது, 4வது குடிநீர் திட்டத்தில், 60வது வார்டு பகுதிகளில், 70 மேல்நிலை மற்றும் தரை மட்டத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர் விநியோகத்தைப் பொறுத்தவரை சில பகுதிகளில் கூடுதல் நேரம் வழங்கப்படுவது, சில பகுதிகளுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் சப்ளை செய்வது போன்ற சில புகார்கள் அடிக்கடி எழுகிறது.
ஊழியர்கள் பணியில் இல்லாத நேரங்களில் குடிநீர் தொட்டி நிரம்பி, குடிநீர் வீணாவது, பிரதான குழாயில் குடிநீர் வரும் சமயத்தில் நீர் நிரப்பாமல் விடுவது போன்ற குளறுபடிகளும் உண்டு.
இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், அம்ரூத் திட்டத்தில் தற்போது கட்டியுள்ள புதிய மற்றும் பழைய மேல்நிலைத் தொட்டிகளில் இதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'ஸ்கேடா' எனப்படும் நவீன கருவி இத் தொட்டிகளில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தொட்டிகளில் நீர் நிரப்பும் நேரம், இருப்பில் உள்ள நீரின் அளவு, வினியோக அளவு மற்றும் வினியோக நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தானியங்கி முறையில் கண்காணித்து பதிவு செய்யப்படும்.அவ்வகையில், தற்போது முதல் கட்டமாக நான்கு இடங்களில் இக்கருவி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பாண்டியன் நகரில் உள்ள தொட்டியில் இக்கருவி பொருத்தும் பணி நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் பார்வையிட்டார். துணை செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.