/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னாறு ரோட்டில் 'பேட்ச் ஓர்க்' பாலங்களுக்கு வர்ணம் பூச்சு
/
சின்னாறு ரோட்டில் 'பேட்ச் ஓர்க்' பாலங்களுக்கு வர்ணம் பூச்சு
சின்னாறு ரோட்டில் 'பேட்ச் ஓர்க்' பாலங்களுக்கு வர்ணம் பூச்சு
சின்னாறு ரோட்டில் 'பேட்ச் ஓர்க்' பாலங்களுக்கு வர்ணம் பூச்சு
ADDED : ஆக 20, 2025 09:23 PM

உடுமலை; சின்னாறு ரோட்டில், 'பேட்ச் ஓர்க்' மற்றும் பாலங்களை பொலிவுபடுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடுமலையில் இருந்து சின்னாறு வழியாக கேரளா மாநிலம் மூணாறு செல்லும் ரோடு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ரோடு உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால், மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
பருவமழைக்கு பிறகு, இந்த ரோட்டில், நெடுஞ்சாலைத்துறையால், 'பேட்ச் ஓர்க்' பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வழித்தடத்திலுள்ள சிறு பாலங்கள், தடுப்பு சுவர்களுக்கு வர்ணம் பூசி பொலிவுபடுத்தும் பணி நடக்கிறது.
இப்பணிகளுக்கு பிறகு, ரோட்டோர மரங்கள் மற்றும் பாலங்களில், 'ரிப்ளெக்டர்' பொருத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.