/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோந்து செல்லும் பாதைகள் மாயம்; பாசன விவசாயிகள் அதிருப்தி
/
ரோந்து செல்லும் பாதைகள் மாயம்; பாசன விவசாயிகள் அதிருப்தி
ரோந்து செல்லும் பாதைகள் மாயம்; பாசன விவசாயிகள் அதிருப்தி
ரோந்து செல்லும் பாதைகள் மாயம்; பாசன விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 07, 2025 10:37 PM
உடுமலை; பி.ஏ.பி., கால்வாய் கரையிலுள்ள பாதைகளை புதுப்பிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வரும் நான்காம் மண்டல பாசன காலத்தில், நீர் திருட்டை தடுக்க ரோந்து செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்திலும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், பூலாங்கிணறு, புதுப்பாளையம், கோமங்கலம் கிளை கால்வாய் உட்பட கால்வாய்கள் வாயிலாக, பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
முக்கியத்துவம் இந்த கால்வாய்கள், கட்டப்படும் போதே, கரையில், வாகனங்கள் செல்லும் வகையில், மண் பாதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பாதையை, பொதுப்பணித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கண்காணிப்புக்கும், விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லவும் பயன்படுத்தி வந்தனர். சில கிராமங்களுக்கு இணைப்பு பாதையாகவும், கால்வாய் பாதைகள் இருந்தது.
முன்பு, பொதுப்பணித்துறையால், குறிப்பிட்ட இடைவெளிகளில், இப்பாதைகளில், முட்புதர்களை அகற்றி, பராமரித்து வந்தனர். பின்னர், பாதையை மேம்படுத்தும் வகையில் சில பகுதிகளில், ஜல்லிக்கற்கள் கொட்டி, ரோடு அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பாதை பராமரிப்பில் பொதுப்பணித்துறை, அக்கறை காட்டவில்லை. இதனால், பெரும்பாலான பாதைகள் முட்புதர் மண்டி, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும், பிரதான கால்வாய் கரையில், கற்கள் பெயர்ந்து பரிதாப நிலையில், காணப்படுகிறது.
இதனால், பொதுப்பணித்துறையினர், ஜீப் உட்பட வாகனங்களில், இரவு நேரங்களில், ரோந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
விவசாயிகளும், தங்களுக்குரிய மடைகளை, சென்று பார்ப்பது, கண்காணிப்பது உட்பட பணிகளுக்காக, வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. வரும் நான்காம் மண்டல பாசனத்தில், நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழுவினர் ரோந்து செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.