/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழங்கிய இடத்தில் வசிக்காத இருவரின் பட்டா ரத்தாகிறது
/
வழங்கிய இடத்தில் வசிக்காத இருவரின் பட்டா ரத்தாகிறது
வழங்கிய இடத்தில் வசிக்காத இருவரின் பட்டா ரத்தாகிறது
வழங்கிய இடத்தில் வசிக்காத இருவரின் பட்டா ரத்தாகிறது
ADDED : ஜூன் 05, 2025 01:41 AM
காங்கயம்; திருப்பூர் மாவட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடு கட்டி குடியிருக்காதவர்களின் பட்டா ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காங்கயம் தாலுகா, மேட்டுப்பாளையம் கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களில், 2 பேர், குறிப்பிட்ட இடத்தில் வசிக்காதது தெரியவந்துள்ளது. இதனால், இருவருக்கும் வழங்கிய பட்டா ரத்து செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார். பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை, அடுத்த, 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ தெரிவிக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது.