'நிட்டிங் ' தேவையை பூர்த்தி செய்யும் 'பெகா' மெஷின்
'நிட்டிங் ' தேவையை பூர்த்தி செய்யும் 'பெகா' மெஷின்
ADDED : மார் 08, 2026 05:58 AM

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் 'ஜாப் ஒர்க்' தொழிற்சாலைகளின் முக்கிய தேர்வாக இருக்கிறது, 'பெகா' நிட்டிங் மெஷின்.
இதுகுறித்து 'ஏ.ஆர்.ஆர்.கே., - டெக்ஸ் மேக்' நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு, 2006 முதல், மிகத்தரமான நிட்டிங் மெஷின்களை வழங்கி வருகிறோம். கடந்த 2023ம் ஆண்டு முதல், சீனாவில் வடிவமைக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும், 'பெகா' என்ற நிட்டிங் மெஷின்களை வழங்கி வருகிறோம்; திருப்பூரில் மட்டும், 150க்கும் அதிகமான மெஷின்கள் விற்றுள்ளன.
நிட்டெக் கண்காட்சியில், இரண்டே நாட்களில், 20 மெஷின்கள் விற்பனையாகியுள்ளது. 'போர் ஒயரிங் பேரிங்' சிஸ்டத்தில் இயங்குவதால், 'பெட்' தேய்மானம் இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பம் என்பதால், துணி உற்பத்தியில் எதிர்பார்த்த தரம் கிடைக்கும்.
இவ்வகை மெஷின்கள் இந்தியா மட்டுமல்ல ஜெர்மன், துருக்கிக்கும் அதிகம் ஏற்றுமதியாகிறது. மற்ற நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து துறைமுகம் வரை மட்டுமே மெஷின்களை வழங்குகின்றன; எங்களது நிறுவனம், திருப்பூருக்கே எடுத்து வந்து டெலிவரி செய்து வருகிறது.
திருப்பூரில் உள்ள 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும், அதிகம் எங்களது 'நிட்டிங்' மெஷின்களையே வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் விவரங்களுக்கு, 97500 00057 என்ற எண்களில் அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
