/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் அபராதம் வசூலித்த வங்கிக்கு 'தண்டம்' விதிப்பு
/
கூடுதல் அபராதம் வசூலித்த வங்கிக்கு 'தண்டம்' விதிப்பு
கூடுதல் அபராதம் வசூலித்த வங்கிக்கு 'தண்டம்' விதிப்பு
கூடுதல் அபராதம் வசூலித்த வங்கிக்கு 'தண்டம்' விதிப்பு
ADDED : ஜன 07, 2024 02:03 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பாலப்பம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மனைவி பவித்ரா. இவர், அப்பகுதி சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், 2021 மார்ச்சில், நகை அடமானம் வைத்து, 96,000 ரூபாய் கடன் பெற்றார்.
நகையை மீட்க விண்ணப்பித்த போது, முன்கூட்டியே கடனை முடிப்பதால், 1,500 ரூபாய் கூடுதலாக செலுத்துமாறு, வங்கியில் தெரிவித்துள்ளனர். பவித்ராவும், நகைக்கடன் தொகை, வட்டி, அபராதம் ஆகியவற்றை செலுத்தி நகைகளை பெற்றார். சில நாட்களுக்கு பின், அவர் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது, 1,500 ரூபாய் அபராத தொகையை வங்கி நிர்வாகமே அவரது சேமிப்பு கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டது தெரிந்தது.
இது குறித்து, வங்கி நிர்வாகத்தை பலமுறை அணுகியும் முறையான பதில் இல்லை. இதனால், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
விசாரித்த நீதிபதி தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன், 'வங்கியில் கூடுதலாக பெற்ற தொகை 1,500, வழக்கு செலவு தொகை 3,000 மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.