/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோரிக்கையை வலியுறுத்தி பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கையை வலியுறுத்தி பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 11:53 PM

அவிநாசி: அவிநாசி தாலுகா அலுவலகம் முன் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு அவிநாசி வட்டாரக் கிளை சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
மாநில பொருளாளர் ராமசாமி, அமைப்புச் செயலாளர் சரவணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். மாவட்ட பிரதிநிதி சுந்தரவேலு, முன்னாள் வட்டார துணைத் தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு பத்து சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்குதல், குறைந்தபட்ச பென்ஷன், 9,000 ரூபாய் என உயர்த்துதல், மருத்துவ காப்பீடு திட்டம், காசில்லா மருத்துவம் உறுதிப்படுத்தி தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
வட்டார தலைவர் பழனிசாமி, துணை தலைவர் வேலுசாமி, வட்டார செயலாளர் சேதுபதி, துணை செயலாளர் ராமாத்தாள், வட்டாரப் பொருளாளர் சின்னத்தம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.