தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டம்


ADDED : செப் 29, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், செப். 30–

திருப்பூரில் ஓய்வூதியர்கள், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்,கலெக்டர் அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் மேகவர்ணன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் துரைராஜ் வரவேற்றார். 115 பேர், காலை முதல் மாலை வரை, பந்தலில் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறவேண்டும். நடப்பாண்டு ஜன. 1ம் தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களையும், 8 வது ஊதியக்குழு ஆய்வு வரம்பில் சேர்க்கவேண்டும். 8 வது ஊதியக்குழு பரிந்துரைகள் காலதாமதமாவதால் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை, ஓய்வூதியத்துடன் இணைக்கவேண்டும். ஓய்வூதியத்தில் சமநிலையை உறுதி செய்யவேண்டும். குடும்ப ஓய்யவூதிய பாகுபாடுகளை நீக்கவேண்டும் என்பது உட்பட 12 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us