நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம் நகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டம் மூலம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பல்வேறு இடங்களில் சாலை தோண்டப்பட்டு வருகிறது. அதில், காங்கயம் நகராட்சி, 2வது வார்டில் பாரதியார் வீதிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்கு தண்ணீர் சப்ளையாவது முறையாக பைப் லைன் குழியை மூடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குழாய் உடப்பை சரி செய்யாததால், குடிநீர் இப்பகுதிக்கு வரவில்லை என, நேற்று காலை, 11:00 மணிக்கு காங்கயம் - திருப்பூர் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் கனிராஜ் பேச்சு நடத்தினார். அதன்பின், போராட்டம் கைவிடப்பட்டது. உடனடியாக குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.