/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறி மார்க்கெட்டுக்கு மக்கள் படையெடுப்பு; நாளை பள்ளிகள் திறப்பு எதிரொலி
/
காய்கறி மார்க்கெட்டுக்கு மக்கள் படையெடுப்பு; நாளை பள்ளிகள் திறப்பு எதிரொலி
காய்கறி மார்க்கெட்டுக்கு மக்கள் படையெடுப்பு; நாளை பள்ளிகள் திறப்பு எதிரொலி
காய்கறி மார்க்கெட்டுக்கு மக்கள் படையெடுப்பு; நாளை பள்ளிகள் திறப்பு எதிரொலி
ADDED : ஜூன் 01, 2025 01:36 AM

திருப்பூர்: நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், காய்கறி வியாபாரிகள் மற்றும் பள்ளி விடுதிகளுக்கு காய்கறி வாங்க பலரும் படையெடுத்ததால், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் குவிந்தது.
தமிழகத்தில், ஒட்டன்சத்திரம், ஒசூருக்கு அடுத்த பெரிய மார்க்கெட்டாக தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் உள்ளது. தினமும், 180 - 200 டன் காய்கறிகள் விற்பனையாகிறது.
பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள், கீரைகள், தேங்காய், உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுகிறது. கர்நாடகா மாநிலம் மைசூர், மகாராஷ்டிரா, ம.பி., உ.பி., பகுதியில் இருந்து வெங்காயம் தினமும், 30 டன்னுக்கும் மேல் வந்து குவிகிறது.
நேரடியாக, 750 வியாபாரிகளும், மறைமுகமாக, 1,500 பேரும் மார்க்கெட் விற்பனையை சார்ந்துள்ளனர். ஏப்., இறுதி வாரம் பள்ளிகள் கோடை விடுமுறை விடப்பட்டது. மே இரண்டாவது வாரம் முதல் கல்லுாரி விடுமுறை துவங்கியது. விடுமுறை துவங்கியதால், மார்க்கெட்டில் விற்பனை குறைந்தது. கமிஷன் மண்டி நடத்துபவர்கள், டன் கணக்கில் காய்கறி வாங்கி விற்போர் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதை குறைத்து கொண்டனர்.
இந்நிலையில், ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், நேற்று ஒரு மாதத்துக்கு பின் விற்பனை களைகட்டியது. தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகம் களைகட்டியது; போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று, அதிகபட்ச விற்பனை இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தென்னம்பாளையம் காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:
பள்ளிகளுக்கு விடுமுறை என்றால், சமையல் பாதியாக குறைந்து விடும். வழக்கமாக வேலைக்கு செல்பவர்களுக்கு உணவு தயார் செய்யும் போது, பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன், மதியம் உணவு தயாரிப்பர்; கோடை விடுமுறை அத்தகைய தயாரிப்புகள் குறைந்தது. காலை மற்றும் இரவு மட்டும்; ஒரு வேளை உணவு, தயாரிப்பு அளவு குறைந்ததால், காய்கறி விற்பனை மந்தமானது.
மண்டிகளில் இருந்து எங்களிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி, சில்லறையில் விற்பனை செய்பவர், மளிகை கடைகளுக்கு காய்களை வாங்கி செல்வோர் வியாபாரிகள் குறைவான அளவே காய்கறி வாங்கிச் சென்றனர். ஜூன், 2ல் பள்ளி திறப்பு என்பதால், நேற்று பள்ளி, கல்லுாரி விடுதிகளுக்கு மொத்தமாக பலரும் காய்கறி வாங்கி செல்கின்றனர்.
மொத்தமாக மூட்டைகளில் காய் வாங்கி புறநகரில் விற்பனை செய்பவர்கள் இன்று (ஞாயிறு) விற்பனையை எதிர்பார்த்து கூடுதலாக காய்கறி வாங்கினர். வரத்து சீராக உள்ளதால், தற்போதைக்கு விலையில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
200 டன் எதிர்பார்ப்பு
ஒரு நாள் முன்னரே காய்கறி விற்பனை சுறுசுறுப்பாகிய நிலையில், இன்று அதிகாலை முதலே காய்கறி விற்பனை அதிகரிக்கும். 200 டன் காய்கறி விற்பனையாகுமென வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நேற்றைய வரத்து, 150 டன்னாக இருந்த நிலையில், 145 டன் காய்கறிகள் விற்பனையாகியது. நாளை பள்ளி திறக்கும் நிலையில், இன்று காய்கறி வரத்தும், விற்பனையும் கூடுதலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.