sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பை அள்ளுவதில்லை... குடிநீர் சப்ளை சரியில்லை; நாய்களால் தொல்லை... தெருவிளக்கு எரிவதில்லை: 39வது வார்டில் பிரச்னைகளை பட்டியலிடும் மக்கள்

/

குப்பை அள்ளுவதில்லை... குடிநீர் சப்ளை சரியில்லை; நாய்களால் தொல்லை... தெருவிளக்கு எரிவதில்லை: 39வது வார்டில் பிரச்னைகளை பட்டியலிடும் மக்கள்

குப்பை அள்ளுவதில்லை... குடிநீர் சப்ளை சரியில்லை; நாய்களால் தொல்லை... தெருவிளக்கு எரிவதில்லை: 39வது வார்டில் பிரச்னைகளை பட்டியலிடும் மக்கள்

குப்பை அள்ளுவதில்லை... குடிநீர் சப்ளை சரியில்லை; நாய்களால் தொல்லை... தெருவிளக்கு எரிவதில்லை: 39வது வார்டில் பிரச்னைகளை பட்டியலிடும் மக்கள்


ADDED : ஜூலை 18, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகராட்சி, 39வது வார்டு, ஆண்டிபாளையம், பெரியாண்டிபாளையம், குள்ளேகவுண்டன்புதுார், சின்னியகவுண்டன்புதுார், குளத்துப்புதுார் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது, பனியன் நிறுவனங்கள், வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் நிறைந்த மங்கலம் ரோட்டில் மையத்தடுப்பு, டிவைடர் வைக்காததால், விபத்துக்கு பஞ்சமில்லை. குறிப்பாக, ஆண்டிபாளையம் குளக்கரை வளைவில் உள்ள, தனியார் பள்ளி முன்புறம் வேகத்தடை உயரம் குறைவாக உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் வாகனங்கள் வேகமெடுப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

பெரியாண்டிபாளையத்தில் இருந்து சின்ன ஆண்டிபாளையம் செல்லும் பாதை இயற்கை அமைப்பில் உயரமான பகுதியாக உள்ளது. மழை பெய்தால், ஆண்டிபாளையம் குளத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்து வருகிறது. சின்ன ஆண்டிபாளையம் - இடுவாய் ரோட்டில், குறுக்கு சந்து வீதிகளில் ஊராட்சியாக இருந்த போது கட்டப்பட்ட உயரம் குறைவான சாக்கடைக் கால்வாய் இன்னமும் அப்படியே உள்ளது. மக்கள் தொகை பெருகியுள்ள நிலையில், இவற்றை உயர்த்திக் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வார்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் வாரம் ஒருமுறை வழங்கப்பட்டாலும், விடுபட்ட, குழாய் அமைக்காத பகுதிகளுக்கு, 12 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் செல்கிறது. மறைவான, சந்து வீதிகள் நிறைய உள்ளது; தெருவிளக்கு எரிவதில்லை என புகார் செய்தால், பத்து நாட்கள் ஆனாலும் வந்து பார்ப்பதில்லை என்கின்றனர், மக்கள்.

பயன்பாட்டுக்கு வராத நுாலகம்


வார்டில், நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் உட்பட அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளது. மாகாளியம்மன் கோவில் பின்புற வீதியில், காமராஜர் காலனியில் நுாலகம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது. நுாலகர் நியமித்து, புத்தகம் வழங்காததால், இரண்டு ஆண்டுக்கு முன் இழுத்து மூடப்பட்டது; பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல், அப்படியே காட்சி பொருளாக உள்ளது. இரவு நேரங்களில் விரும்பத்தகாத செயல்கள் நடக்கிறது; நுாலகத்தை திறந்து செயல்பட்டு கொண்டு வர முயற்சித்தால், மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.

சுத்தம் இல்லாத தண்ணீர் தொட்டி


குறிஞ்சி நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஏணி, நெடுக செடிகள் வளர்ந்துள்ளது. மாதக்கணக்கில் தண்ணீர் தொட்டி துாய்மைப்படுத்தப் படவில்லை என்பதை அங்குள்ள காட்சிகளே தெரிவிக்கிறது. அருகில் உள்ள பொதுக் கழிப்பிடத்துக்கு குறைவான அளவே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், தண்ணீர் போதியதாக இல்லை. இயற்கை உபாதைகளுக்கு செல்வோர் தர்மசங்கடத்துக்கு ஆளாகின்றனர். சின்னாண்டிபாளையம் - குறிஞ்சிநகர் ரோடு பேட்ஜ்ஒர்க் மேற்கொள்ளாமல் ஆங்காங்கே குழியாக உள்ளது. புதியதாக இச்சாலையில் பயணிப்பவர்கள் தடுமாறி விழுகின்றனர்.

சின்னாண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளது. கேட் உடைந்து, மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. புதிய வகுப்பறை பணிகள் ஒருபுறம் நடந்தாலும், ஏற்கனவே உள்ள பழைய வகுப்பறை முன்புறம் சுவர்களில் விரிவான பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல், கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. பள்ளி வளாகத்துக்குள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

தொட்டியின் கீழ், உள்ள கேட்வால்வு குழியை தற்காலிகமாக ஜன்னல், தகரம் வைத்து மூடியுள்ளனர். பள்ளி குழந்தைகள் அவ்விடத்துக்கு சென்றால், ஆபத்து காத்திருக்கிறது. நடுநிலைப்பள்ளியை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், பள்ளியில் விரிவான சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டியது அவசர, அவசியம்.

பள்ளி முன் குப்பை தொட்டி


வார்டில் குப்பை சேகரித்து வைக்க நிறைய இடங்கள் உள்ள நிலையில், பெரியாண்டிபாளையம் சுகாதார வளாகம் மற்றும் நடுநிலைப்பள்ளி முன்புறம், குளத்துப்புதுார் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி முன்புறம் தான் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதிலும், சுகாதார வளாகம் முன் மூட்டை மூட்டையாக குப்பை இருப்பு வைக்கப்படுகிறது. இவற்றை சாப்பிட நாய்கள் பல படையெடுக்கின்றன.

வார்டில் திரும்பும் இடங்களில் எல்லாம் குப்பை தொட்டி நிறைந்திருப்பதையும், நாய்கள் நடமாட்டத்தையும் காண முடிகிறது.

முடிந்த வரை பணியாற்றுகிறேன்

மக்கள் எதிர்பார்க்கும் பிரச்னைகளை விரைந்து முடிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். வார்டின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடைக் கால்வாய் கட்டித்தர வேண்டும் என கேட்டுள்ளேன். பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சி சுகாதார ஊழியர் மூலம் குப்பை அகற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். கிராமம், நகரம் இரண்டும் பின்னிபிணைந்த பகுதி என்பதால், மக்களுக்கு இயன்ற வரை அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றித்தந்து வருகிறேன்.-- சாந்தி (தி.மு.க.,)39வது வார்டு கவுன்சிலர்








      Dinamalar
      Follow us