/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகைமண்டலமாக பாறைக்குழி காளம்பாளையம் மக்கள் தவிப்பு
/
புகைமண்டலமாக பாறைக்குழி காளம்பாளையம் மக்கள் தவிப்பு
புகைமண்டலமாக பாறைக்குழி காளம்பாளையம் மக்கள் தவிப்பு
புகைமண்டலமாக பாறைக்குழி காளம்பாளையம் மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 30, 2025 11:50 PM

திருப்பூர்; திருப்பூரில் சேகரமாகும் குப்பைகள், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்தது. நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாகவும், பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது எனவும், அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதல், குப்பையால் நிரம்பி வழிந்த காளம்பாளையம் பாறைக்குழியில், தீ பரவி, குப்பை எரிந்து வருகிறது; இதனால், அப்பகுதி முழுக்க புகைமண்டலமாக மாறியது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள குப்பையில், தானாக தீ பிடித்ததா, அல்லது யாரேனும் தீ வைத்தனரா என்பது தெரியவில்லை. பாறைக்குழியில் கொட்டப்படும் குப்பை, முறையாக மேலாண்மை செய்யப்படும்; இதனால், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இது வெறும் பேச்சளவில் மட்டும் தான் என்பது, இதன் வாயிலாக நிரூபணமாகி இருக்கிறது. புகை மண்டலத்தால் ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுப்பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.