/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் மயானம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
மின் மயானம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 04, 2025 07:32 PM
உடுமலை; மடத்துக்குளத்தில், மி ன் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமங்களில் இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் மயானங்கள் உள்ளன. இவற்றை மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மடத்துக்குளம் அருகே மின்மயானம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மடத்துக்குளம் பேரூராட்சி, கழுகரை பகுதியில், மயானத்தை ஒட்டியுள்ள பகுதியில், 1.67 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, ஒரு சமூகத்தினர் பயன்பாட்டில் மட்டுமே மயானம் உள்ள நிலையில், இதன் அருகில் கோவில், அரசு பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, மக்கள் குடியிருப்பு பகுதியில் மின் மயானம் அமைக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இடத்தில் அளவீடு பணிக்கு சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.