/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுங்கு சீசன் துவக்கம் மக்கள் மகிழ்ச்சி
/
நுங்கு சீசன் துவக்கம் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 14, 2025 10:15 PM

உடுமலை, ; வெப்பம் தணிக்கும் நுங்கு சீசன் உடுமலை பகுதியில் துவங்கி, வரத்து அதிகரித்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. இதை சமாளிக்கும் வகையில், மக்கள் இளநீர், தர்பூசணி போன்றவற்றை நாடுகின்றனர். மேலும் குளிர்பான கடைகளுக்கும் மக்கள் அதிக அளவில் செல்கின்றனர்.
இந்நிலையில், கோடை காலத்தில், வெப்பம் தணிக்க மக்கள், தர்பூசணி, நுங்கு விரும்பி உண்கின்றனர். உடுமலை பகுதியில் பனை மரங்கள் குறைவாகவே உள்ளதால், பிற மாவட்டங்களில் இருந்தும், மடத்துக்குளம் பகுதியில் இருந்தும், நுங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
இந்தாண்டு சீசன் தாமதமாகவே துவங்கி, தற்போது நகரிலும், புறநகர் பகுதியிலும் நுங்கு விற்பனை துவங்கியுள்ளது. ஒரு பீஸ் 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நன்மைகள் தரும் நுங்கு சீசன் துவங்கியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.