/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒயிட்ஹவுஸில் தள்ளுபடி துணிகளை அள்ளும் மக்கள்
/
ஒயிட்ஹவுஸில் தள்ளுபடி துணிகளை அள்ளும் மக்கள்
ADDED : நவ 23, 2024 05:37 AM

திருப்பூர் |; திருப்பூர், குமரன் ரோட்டிலுள்ள ஒயிட்ஹவுஸ் ஜவுளி நிறுவனத்தில், தள்ளுபடி விற்பனை நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து ஒயிட்ஹவுஸ் நிர்வாக இயக்குனர் அன்சார் அலி கூறியதாவது:
எங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டு 67 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தருணத்தை வாடிக்கையாளர்களுடன் கொண்டாடும் வகையிலும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சேலஞ்ச் ஆபர் என்கிற பெயரில், மூன்று நாட்களுக்கு மட்டும், 40 சதவீத நேரடி தள்ளுபடி அளிக்கிறோம்.
பெண்கள் பிரிவில் அனைத்துவகையான சேலை ரகங்கள், சுடிதார் மெட்டீரியல், ரெடிமேட் சுடிதார், டாப்ஸ், லெகின்ஸ், குழந்தைகளுக்கான ரெடிமேட், வெஸ்டர்ன் கலெக் ஷன், ஆண்களுக்கான சர்ட், பேன்ட் மெட்டீரியல் மற்றும் ரெடிமேட் சர்ட், பேன்ட் ரகங்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
'ஸ்டாக் கிளீயரன்ஸ்' போல் அல்லாமல், விற்பனையில் இருக்கும் புதிய ஆடை ரகங்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ஆபர் தொடங்குவதற்கு முன்தினம் விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து நேரடியாக 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நவ., 22ல் துவங்கிய தள்ளுபடி விற்பனை நாளை (24ம் தேதி) வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மட்டும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.