/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னைக்கு தீர்வு : மக்கள் சபதமேற்க வேண்டும்!
/
குப்பை பிரச்னைக்கு தீர்வு : மக்கள் சபதமேற்க வேண்டும்!
குப்பை பிரச்னைக்கு தீர்வு : மக்கள் சபதமேற்க வேண்டும்!
குப்பை பிரச்னைக்கு தீர்வு : மக்கள் சபதமேற்க வேண்டும்!
ADDED : நவ 15, 2025 01:14 AM

- நமது நிருபர் -
திருப்பூர் மாநகராட்சி சுகாதாரம் சார்ந்த பிரச்னையில் 'கோட்டை' விட்டிருக்கிறது. அதன் எதிர்வினை தான், தற்போது, 'குப்பை' வடிவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
வீடு, ஓட்டல், வணிக நிறுவனங்களில் இருந்து தினசரி வெளியேற்றப்படும் குப்பைகள் பாறை குழிகள், மயான நிலம், ஓடை புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் கொட்டியதன் விளைவு, திருப்பூர் மாநகர எல்லை மற்றும் ஊரக பகுதிகளில் சுகாதாரம் சீர் கெட காரணமாகியிருக்கிறது. திடக்கழிவு மேலாண்மை என்பதும், அது தொடர்புடைய சுத்தம், சுகாதாரம் என்பதும், 'பூஜ்ய' நிலை தான்.
ஆண்டாண்டு காலமாய் பாறை குழிகளில் குப்பை கொட்டப்பட்டு வந்த நிலையில், அமைதி காத்த மக்கள், தற்போது கொந்தளிக்க துவங்கியிருப்பது, காலம் கடந்த ஞானம். இருப்பினும், வரவேற்கத்தக்கது.
திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர்கள் சிலர் கூறியதாவது:
பொது இடத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் துவங்கி, அரசியல் கட்சியினர், தொழில் துறையினர், தன்னார்வ அமைப்பினர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் குரலும், ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது. தொடர் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்; போராட்ட களத்தில் திரளான மக்கள் குவிகின்றனர்.
n கடைகளில் எக்காரணம் கொண்டும் பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை விற்க அனுமதிக்க மாட்டோம்; நாங்கள் யாரும் பாலிதீன் பை, பிளாஸ்டிக் பொருட்களை வாங்க மாட்டோம். தவிர்க்க முடியாமல் வீட்டுக்குள் நுழையும் பாலிதீன் பைகளை, தனியாக சேகரித்து வைப்போம்.
n எங்களது ஒவ்வொரு வீடுகளிலும் மக்கும், மக்காத குப்பை என, தனித்தனியாக தரம் பிரித்து வைப்போம்; உள்ளாட்சிகளின் துாய்மை பணியாளர்கள் தினசரி அவற்றை தரம் பிரிக்கப்பட்ட நிலையில் தான் வாங்க வேண்டும்; அறிவியல் முறைப்படி தான் அகற்ற வேண்டும்.
n தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பாலிதீன் பை, அட்டைப் பெட்டி உள்ளிட்டவற்றை மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சிக்கு அனுப்புவதை கட்டாயப்படுத்தும் வரை ஓயாது குரல் கொடுப்போம்' என, பொதுமக்கள் சபதமேற்பதன் வாயிலாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஏற்படும்.

