/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடையூறாக உள்ள மதுக்கடையை மாற்றுங்க; மக்கள் வலியுறுத்தல்
/
இடையூறாக உள்ள மதுக்கடையை மாற்றுங்க; மக்கள் வலியுறுத்தல்
இடையூறாக உள்ள மதுக்கடையை மாற்றுங்க; மக்கள் வலியுறுத்தல்
இடையூறாக உள்ள மதுக்கடையை மாற்றுங்க; மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 08, 2025 08:18 PM
உடுமலை; உடுமலை நகர வீதியில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும், 'டாஸ்மாக்' மதுக்கடையை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை நகரின் முக்கிய ரோடாக பசுபதி வீதி உள்ளது. தளிரோட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கான பிரதான இணைப்பு பகுதியாகவும் உள்ளது.
வணிக கடைகளும், குடியிருப்புகள் அதிகமுள்ள இப்பகுதியில், டாஸ்மாக் மதுக்கடையும் அமைந்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதியில் இக்கடை இருப்பதால் அப்பகுதியினர் நாள்தோறும் நிம்மதியில்லாமலே உள்ளனர்.
மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களில் காலையிலும் அப்பகுதி வழியாக கடந்துசெல்ல முடியாத வகையில், 'குடி'மகன்கள் இடையூறு ஏற்படுத்துகின்றனர். மது அருந்திவிட்டு, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் டம்ளர்களை வீசுவதும், திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் மாற்றி விட்டனர்.
இதனால் அப்பகுதி முழுவதுமே மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.மேலும், தளிரோட்டுக்கு செல்வதற்கு, மதுக்கடையை கடந்து செல்ல முடியாத வகையில், 'குடி'மகன்கள் வாகனங்களின் குறுக்கே வருவது, தாறுமாறாக ஓட்டுவதுமாக உள்ளனர்.
பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.