/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு ரோடு சந்திப்பில் நெரிசல் தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
/
நான்கு ரோடு சந்திப்பில் நெரிசல் தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
நான்கு ரோடு சந்திப்பில் நெரிசல் தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
நான்கு ரோடு சந்திப்பில் நெரிசல் தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 29, 2025 11:22 PM

உடுமலை; உடுமலை, தாராபுரம் ரோட்டில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் குண்டும், குழியுமாக ரோடு காணப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதியில், ரவுண்டானா மற்றும் ரோடு அமைக்கும் பணி இழுபறியாகி வருகிறது.
இப்பகுதியில், ரோடு தோண்டப்பட்டு, மண் ரேடாக மாறியுள்ளதோடு, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், எந்த விதமான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
நான்கு வழிச்சாலையில், மணிக்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், தாராபுரம் ரோட்டில் செல்லும் வாகனங்களும், செல்ல வழியின்றி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்களுக்கும் குறுகிய ரோடு உள்ளதால், எந்தவிதமான அறிவிப்பு பலகையும் வைக்கப்படாத நிலையில், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிந்து, வாகனங்கள் மேலே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.