/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கல்லுாரி சந்தை'யை பார்வையிட்ட மக்கள்
/
'கல்லுாரி சந்தை'யை பார்வையிட்ட மக்கள்
ADDED : செப் 22, 2024 11:53 PM
உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கான 'கல்லுாரி சந்தை' இரண்டு நாட்கள் நடந்தது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் 'கல்லுாரி சந்தை' இரண்டு நாட்கள் நடந்தது.
மகளிர் சுய உதவிக்குழுவினர், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த சந்தை நடந்தது. கல்லுாரி முதல்வர் கல்யாணி சந்தையை துவக்கி வைத்தார்.
திருப்பூர், திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் தயாரித்த தயாரிப்புகளை சந்தைப்படுத்தினர்.
அதில் கைவினைப்பொருட்கள், ஆபரணங்கள், சிறுதானிய உணவு பண்டங்கள், கைத்தறி சேலைகள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் இடம் பெற்றன. கல்லுாரி மாணவர்களும் தனியாக கடைகள் அமைத்திருந்தனர்.
இரண்டு நாட்கள் நடந்த சந்தையில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவி குழுவினர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களும் பங்கேற்றனர். மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் சந்தையை பார்வையிட்டனர்.