/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரம் வெட்டுவதற்கு மனம் கூசாத மாக்கள்
/
மரம் வெட்டுவதற்கு மனம் கூசாத மாக்கள்
ADDED : அக் 10, 2025 12:59 AM

பல்லடம்; அனுமதி பெற்று மரங்கள் வெட்டப்படுவது ஒருபுறம் இருக்க, காரணமே இல்லாமல், எந்த அனுமதியும் பெறாமல், மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பல்லடம் அருகே, மாதப்பூர்- - தொட்டம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள ரோட்டோர கருவேல மரங்கள் மற்றும் வேம்பு உள்ளிட்டவை வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. மின்கம்பிகளில் உரசும் என்பதால், மின்வாரியத்தினர் வெட்டி வீழ்த்தினார்களா; அல்லது மரங்களை வெட்டி கடத்தும் கும்பலின் செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மின்கம்பிகளை உரசும்படியாக இருந்தால், கிளைகளை மட்டும் வெட்டி இருக்கலாம். ஆனால், இவ்வாறு மரத்தை முழுமையாக வெட்டி சாய்ப்பது ஏற்புடையதல்ல. வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரிப்பதுடன், எதிர்வரும் நாட்களில் இது போன்ற மரங்கள் வெட்டும் செயல் நடக்காமல் இருப்பதை கண்காணித்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.