/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டா கேட்ட பொதுமக்களுக்கு 'சட்டு'னு கொடுக்காமல் இழுத்தடிப்பு
/
பட்டா கேட்ட பொதுமக்களுக்கு 'சட்டு'னு கொடுக்காமல் இழுத்தடிப்பு
பட்டா கேட்ட பொதுமக்களுக்கு 'சட்டு'னு கொடுக்காமல் இழுத்தடிப்பு
பட்டா கேட்ட பொதுமக்களுக்கு 'சட்டு'னு கொடுக்காமல் இழுத்தடிப்பு
ADDED : செப் 30, 2024 11:55 PM

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட கருப்பண்ணசாமி நகரில் வசிக்கும், 31 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு, தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக, வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்து வருகிறோம். முன்னாள் எம்.பி., நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்த போது, உடனடியாக நில அளவீடு பணி நடந்தது. இதன் பிறகு, வரைபடம் போடப்பட்டு பட்டா கொடுப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னும், பட்டா வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே, மேலும் தாமதிக்காமல் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல், மாணிக்காபுரம் கிராமத்தில் வசிக்கும், 147 பட்டியல் இனத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு, கடந்த, 2000வது ஆண்டு பட்டா வழங்கப்பட்டது ஆனால், இன்றுவரை இந்த இடம் வகை மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, வங்கி கடன் பெறுவது, பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாமல், இப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நிலத்தை வகை மாற்றம் செய்து, 147 குடும்பங்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பல்லடம் தாசில்தார் ஜீவா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மா.கம்யூ., கட்சியின் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.