/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழிப்பண்ணையால் தொல்லை தாசில்தாரிடம் மக்கள் முறையீடு
/
கோழிப்பண்ணையால் தொல்லை தாசில்தாரிடம் மக்கள் முறையீடு
கோழிப்பண்ணையால் தொல்லை தாசில்தாரிடம் மக்கள் முறையீடு
கோழிப்பண்ணையால் தொல்லை தாசில்தாரிடம் மக்கள் முறையீடு
ADDED : ஜூலை 07, 2024 03:01 AM

தாராபுரம்:கோழிப்பண்ணையால், கிராமம் முழுவதும் மக்கள், பூச்சி தொல்லையால் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தாராபுரம்
அருகேயுள்ள சின்னக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள்,
தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம் நேற்று அளித்த மனுவில்
கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில்
இருந்து உருவாகும் பூச்சி, கிராமம் முழுவதும் பரவி, வீடுகளுக்குள்
புகுகிறது. இதனால் உணவு சமைக்கவோ, உணவு உண்ணவோ முடிவதில்லை. இரவில்
துாங்கும் போது காதுகளுக்குள் புகுந்து விடுகிறது. அரிப்பு போன்ற உபாதை
ஏற்படுகிறது. விவசாய தோட்டத்தில் கீரை மற்றும் பயிர்களை சேதம்
செய்கிறது.
இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
கோழிப்பண்ணையை முடி, பூச்சி தொல்லையிலிருந்து விடுபட நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். உயர்
அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக, தாசில்தார் உறுதி
கூறியதாக மக்கள் தெரிவித்தனர்.