/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயான பூமியில் பொதுகிணறு அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
மயான பூமியில் பொதுகிணறு அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 26, 2024 11:33 PM
உடுமலை : மடத்துக்குளம் ஒன்றியம், வேடபட்டி ஊராட்சியில், பொது மயானம் பகுதியில், குடிநீருக்கு பொது கிணறு அமைத்துள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேடபட்டியை சேர்ந்த பொதுமக்கள் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் வழங்கிய மனு:
மடத்துக்குளம் ஒன்றியம், வேடபட்டி ஊராட்சியில், மயான பூமியில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொது கிணறு வெட்டப்பட்டுள்ளது. மயான பூமியில், பொதுமக்களுக்கான குடிநீர் ஆதாரமாக கிணறு வெட்டப்பட்டுள்ளது.
மயான கிணற்றிலிருந்து, ஊராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவது, சுகாதாரக்கேடு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்பகுதியில், மழை நீரை சேமிக்கும் வகையில், அமைந்திருந்த குட்டையும் மூடப்பட்டு வருகிறது.
எனவே, குட்டையை மீட்கவும், மயான பூமியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்வதை, தரம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

