ADDED : டிச 30, 2024 01:12 AM

தேவகி, தலைவர், தொரவலுார் ஊராட்சி,திருப்பூர் ஒன்றியம்:
முதன்முதலாக தேர்லில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற போது, நிலைமை மிக மோசமாக இருந்தது. குப்பை மற்றும் குடிநீர் பிரச்னை பெரிய சவாலாக இருந்தது. எம்.எல்.ஏ., -எம்.பி., - மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் நிதியை பெற்று, பணிகளை செய்தோம். எனது கணவர் கிராம மக்கள் இயக்கத்தில் இருந்தாலும், ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடவில்லை. வார்டு உறுப்பினர்கள், மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். ஒன்றிய அதிகாரிகளும் கேட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். குக்கிராமம் அதிகம் என்பதால், ரோடு வசதியை முழுமையாக செய்யமுடியவில்லை; பெண்களும், ஊராட்சியை நிர்வாகம் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளேன்.
பயிற்சிக்கு பின்னரே
உருவான விழிப்புணர்வு
கஸ்துாரி பிரியா, புதுப்பாளையம் ஊராட்சி, அவிநாசி ஒன்றியம்:
தலைவராக பொறுப்பேற்ற போது, நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு இல்லை. பவானிசாகரில், ஐந்து நாட்கள் பயிற்சி பெற்ற பிறகுதான், நிர்வாகம், திட்டங்கள், பதிவேடு பராமரிப்பு, ஊராட்சி தலைவரின் அதிகாரம்,கடமைகள் குறித்து தெரியவந்தது. ஒன்றிய அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்ததால், 80 சதவீத பணிகளை செய்ய முடிந்தது. தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி, நமக்கு நாமே திட்டத்தில், நிதி திரட்டி, இதர பணிகளை செய்தோம். கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்; புதுப்பாளையம் ஊராட்சியை முதன்மையான ஊராட்சியாக மாற்றியிருக்கிறோம்.
முழு ஒத்துழைப்பு
அளித்த அதிகாரிகள்
சங்கீதா, 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர், திருப்பூர் ஒன்றியம்:
எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய குழுவின் முழு ஒத்துழைப்பு இருந்ததால், மக்களுக்கான பணிகளை செய்ய முடிந்தது. கிடைக்கும் நிதியை சமமாக பங்கிட்டு, பணிகளை செய்துள்ளோம்; ஒன்றிய கவுன்சிலரிடம் மக்கள் எதுவும் கேட்கவில்லை; நாங்களாக தேடிச்சென்று, ரோடு உள்ளிட்ட பணிகளை செய்து கொடுத்தோம். கொரோனா முடியும் வரை, நிதி இல்லை; அதற்கு பிறகுதான், வார்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டது; தேவையான பணிகளை செய்ய முடிந்தது; அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
பெண்களால் நிச்சயம்
நிர்வகிக்க முடியும்
தேவகி, தலைவர், தொரவலுார் ஊராட்சி, திருப்பூர் ஒன்றியம்:

***