ADDED : மே 24, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளருக்கு அனுப்பிய மனு:
திருப்பூர் மாநகராட்சி, 25 வது வார்டு, 15 வேலம் பாளையம் மெயின் ரோடு, அமர்ஜோதி கார்டனில் இருந்து, அம்மன் திருமண மண்டபம் வரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே உடைந்து குழியாக உள்ளது.
மழை சிறிய அளவில் பெய்தாலும் பள்ளத்தில் மழைநீர் தேங்கி பள்ளம் தெரியாமல் பைக்கில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். எனவே அப்பகுதியில் தார் சாலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
