/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணித்திறனாய்வு போட்டி; மாநகர போலீசுக்கு கோப்பை
/
பணித்திறனாய்வு போட்டி; மாநகர போலீசுக்கு கோப்பை
ADDED : ஜூலை 04, 2025 12:44 AM
திருப்பூர்; சென்னையில் நடந்த மாநில அளவிலான பணித்திறனாய்வு போட்டியில், மாநகர போலீஸ் சார்பில் பங்கேற்ற போலீசார் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்து சுழற்கோப்பையை வென்றனர்.
தமிழக காவல்துறை சார்பில் 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான பணித்திறனாய்வு போட்டி சென்னை வண்டலுார், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் சமீபத்தில் நடந்தது. இப்போட்டியில் மாவட்ட, மாநகர போலீசார் பலர் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், எஸ்.ஐ., போலீசார் பங்கேற்று அசத்தியுள்ளனர்.
அதில், திருப்பூர் சைபர் கிரைம் லேப் எஸ்.ஐ., கனகவள்ளி, கைரேகை மேம்பாடு போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். கம்ப்யூட்டர் விழிப்புணர்வு போட்டியில் முதல்நிலை போலீசார் தனலட்சுமி வெள்ளி வென்றார்.
மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் கார்த்திக், போலீஸ் வீடியோகிராபி போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பிடித்து, வெள்ளி வென்றார். தொடர்ந்து, மாநில அளவில், மூன்றாமிடம் பெற்று, சுழற்கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற, மூன்று பேரையும், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி பதக்கம், சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், வெற்றி பெற்று திரும்பிய போலீசாரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.