/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயல்திறன் உதவியாளர் நீலகிரிக்கு துாக்கியடிப்பு
/
செயல்திறன் உதவியாளர் நீலகிரிக்கு துாக்கியடிப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:08 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஸ்கூட்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங் தலைமையிலான குழுவினர், இரண்டு நாட்கள் திருப்பூரில் முகாமிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்கூட்டர் வழங்கியது தொடர்பாக முழுமையான ஆய்வு நடத்தினர்.
சிறப்புக்குழுவின் அறிக்கையை தொடர்ந்து, கடந்த, 4ம் தேதி, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பணிபுரிந்த வசந்தராம்குமார், ராணிப்பேட்டைக்கு மாற்றப்பட்டார்; அங்கு பணிபுரிந்த சரவணகுமார், திருப்பூருக்கு புதிய அலுவலராக நியமிக்கப்பட்டார்.
அடுத்ததாக, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதாலும், ஸ்கூட்டர் வழங்கியதில் குளறுபடிகளுக்கு காரணமான செயல் திறன் உதவியாளரை பணியிட மாறுதல் செய்யவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
அதனால், செயல் திறன் உதவியாளர் (நிலை - 1) சுப்பன், நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கோவையில், பணிபுரியும் ரகுராமனை, திருப்பூருக்கு நியமித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்பாடுகள் செம்மையாகும் என, மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.